
ஜொகூர் பாரு பிப் 14
ஜொகூர் மஇகா மகளிர் அணியின் 35 ஆவது தண்ணீர் பந்தல் மற்றும் அன்னதானம் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
தைப்பூசத்தையோட்டி இங்குள்ள அருள்மிகு தண்டபாணி ஆலயத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதாக மஇகா தேசிய மகளிர் அணி தலைவியும் கெமேலா சட்டமன்ற உறுப்பினருமான சரஸ்வதி கூறினார்.
சுமார் 25,000 பக்தர்களுக்கு இலவச பானமும் உணவும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தைப்பூசத்தையோட்டி முருகப்பெருமானுக்கு நேர்த்திக் கடன்களை செலுத்திய பக்தர்களுக்கு இந்த இலவச சேவை வழங்கப்பட்டது குறித்து தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.
இந்த தண்ணீர் பந்தல் மற்றும் அன்னதானம் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் தாங்கள் இவ்வேளையில் நன்றி கூறுவதாக அவர் சொன்னார்.


