
தெப்ராவ் பிப் 12
இங்குள்ள பாண்டார் டத்தோ ஓன் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச திருவிழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நேற்று காலை முதல் பக்தர்கள் கோயில் வளாகத்தில் காவடி மற்றும் பால்குடங்கள் ஏந்தி முருகப்பெருமானுக்கு தங்களின் காணிக்கையை செலுத்தினர்.
இந்த தைப்பூச கொண்டாட்டத்திற்கு டத்தோஸ்ரீ மோகனா சிறப்பு வருகை புரிந்தார்.
ஆலயத்தின் தலைவர் டாக்டர் முனியாண்டி இவருக்கு சிறப்பு செய்தார்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பாண்டார் டத்தோ ஓன் வட்டாரத்தைச் சேர்ந்த இந்துக்கள் இந்த கொண்டாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் முனியாண்டி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


