Saturday, June 6, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அனைத்து மலேசிய இந்துக்களுக்கும் தைப்பூச கொண்டாட்ட வாழ்த்துக்கள்!

கோலாலம்பூர் பிப் 12
இந்துக்களின் முக்கிய சமய விழா கொண்டாட்டமான தைப்பூச திருநாளை கொண்டாடி வரும் அனைத்து மலேசிய இந்துக்களுக்கும் பாஸ் தேசிய ஆதரவு பேரவையின் பொதுச் செயலாளர் ஆர்.ஹரிதரான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
முருக கடவுளுக்கு ஒரு முக்கியமான தினமான இந்த தைப்பூச கொண்டாட்டம் உலகளாவிய இந்துக்கள் விமர்சையாக கொண்டாடி வருவது நமக்கு பெருமை அளிப்பதாக அவர் சொன்னார். தை மாதத்தில் கொண்டாடப்படும் இந்த புனித திருநாள் ஒரு மாண்புமிக்க உன்னால் என்றார் அவர்.
முருக பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்த இன்றைய தினத்தில் நமது இந்துக்கள் காவடி மற்றும் பால்குடம் ஏந்தி தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
இந்த திருநாளுக்கு முன்னர் விரதமிருந்து தங்களின் நேர்த்திக்கடனை முருகப்பெருமானுக்கு முன் வைக்கும் நேரமிது என்றார் அவர்.
நமது இந்துக்கள் இந்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமது வாழ்த்துக்கள் என்றார் அவர்.
இந்நாட்டில் உள்ள அனைத்து சமயங்களின் ஒற்றுமைக்கு பாஸ் ஆதரவு பேரவை தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் என அவர் உறுதியளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular