Saturday, June 6, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சிறார் சமூக நல காப்பக பிள்ளைகளுக்கு சஞ்சீவன் உதவி கரம்

பாகாவ் பிப் 12
இங்குள்ள சிறார் சமூக நல காப்பகத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்கு பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் உதவி தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் உதவி கரம் நீட்டினார்.
பள்ளிக் கல்வியின் தவணை ஆண்டு காலம் நெருங்கி வருவதால் இந்த காப்பகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கினார்.
இந்த சிறிய உதவி இக்காப்பகத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ சஞ்சீவன் கூறினார்.
இந்த சிறார்கள் தங்களுடைய கல்வியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


பள்ளிப் பருவத்தில் தொடக்க கால முதல் இவர்கள் தங்களின் கல்வியில் முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும்.
இந்த சிறார்கள் தங்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கல்வியில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இவர்கள் போன்ற ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவ சமூக தலைவர்கள் முன் வர வேண்டும் என அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular