Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

குவே பாகுல் விற்பனையில் டத்தோ பாலமுரளி தீவிரம்

தெப்ராவ் ஜன 24
சீனபுத்தாண்டை முன்னிட்டு சீன பலகாரமான குவே பாகுல் விற்பனையில் தொழிலதிபர் டத்தோ பாலமுரளி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஆண்டுதோறும் சீன புத்தாண்டு காலங்களில் இந்த குவே பாகுல் விற்பனையில் டத்தோ பாலமுரளி பிரபலமடைந்து வருகிறார்.
ஜொகூர் ஜெயா சீன புத்தாண்டு சந்தையில் அதிகமான இவரிடமிருந்து குவே பாகுல் பலகாரத்தை வாங்கி வருகின்றனர்.


இந்த நிலையில் சீன புத்தாண்டு சந்தைக்கு வருகை புரிந்த YSR தலைவர் டத்தோ சுகுமாரன், பாலமுரளியை வெகுவாக பாராட்டினார்.
ஒரு இந்தியர் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருவது நமக்கு பெருமையை தருவதாக டத்தோ சுகுமாரன் தெரிவித்தார்.
நமது இந்திய இளைஞர்கள் இதுபோன்ற தொழில்களை கற்றுக் கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
சீன சமூகத்தினர் இதுபோன்ற தொழில்களில் பிரபலமடைந்து வருகின்றனர்.
நாமும் இந்த தொழிலை கற்றுக் கொள்வது நல்லது என அவர் ஆலோசனை கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular