
கோப்பெங் ஜன 23
மலேசிய இந்து சங்க கோப்பெங் கிளையின் பொங்கல் விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது.
கடந்த ஜனவரி 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களின் ஆதரவை வழங்கியதாக மலேசிய இந்து சங்க கோப்பெங் வட்டாரப் பேரவையின் தலைவர் ‘விவேக ரத்னா’ பெ. சரஸ்வதி கூறினார்.
இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பொங்கல் வைத்தால், கோலம் போடுதல், உரி அடித்தால், தோரணம் பின்னுதல், பூ பின்னுதல் மற்றும் சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி போன்றவற்றில் இவ் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திய சமூகத்தினர் முழுமையாக பங்கு பெற்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியதாக சரஸ்வதி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நமது கலாச்சார விழாவிற்கு கோத்தா பாரு கோப்பெங் தோட்ட இந்திய சமூகத்தினர் வற்றாத ஆதரவை வழங்கி வருவதாக அவர் பெருமிதம் கொண்டார்.
இது போன்ற நமது கலாச்சார கொண்டாட்டங்கள் நம்மிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கோப்பெங் மலேசிய இந்து சங்க வட்டாரப் பேரவையின் திட்டங்களுக்கு இங்குள்ள இந்திய சமூகத்தினர் வற்றாத ஆதரவை வழங்கி வருவது பெரும் மகிழ்ச்சி தருவதாக அவர் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆதரவு வழங்கிய பேராக் இந்து சங்க பேரவையின் தலைவர் ‘ விவேக ரத்னா’ சுந்தர், அர்ஜுனேஸ்வரர் திரௌபதி அம்மன் ஆலய தலைவர் ராஜா, செயலாளர் தினிஷா, இந்து இளைஞர் பிரிவின் தலைவர் கோகுலன், மஇகா கோப்பெங் கிளையின் கவிதா உட்பட அனைவருக்கும் சரஸ்வதி நன்றி கூறினார்.


