
ஐக்கோம் மாணவர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பள்ளி வாரிய உறுப்பினர்களும் இணைந்து கடந்த ஜனவரி 17ம் தேதி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்
ஐக்கோம் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் , மாவட்ட அளவில் என பல போட்டிகளில் கலந்து திறமைகளை வெளிகாட்டியுள்ளனர். அந்த மாணவர்களின் திறமைகளுக்கு தூண்டுகோலாக இருக்கவே இந்த பரிசளிப்பு விழா மிக விமரிசையாக ஏற்பாடு செய்ததாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி மேகா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளராக கோத்தா கெமுனிங், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்
சம்புநாதன் அவர்கள் கலந்து கொண்டார். மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்வதாகவும், தொழில்நுட்ப கல்வியை பள்ளியில் தொடர ஆவண செய்வதாக தெரிவித்தார்.

மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் இந்த நிகழ்ச்சி இருப்பதாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பெற்றோர்களும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். மாணவர்களின் படைப்புகளோடு, இரவு உணவும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மாணவரும் தனித்திறமைகளை கொண்டுள்ளனர். அவர்களை உற்சாக படுத்தவும், அதே வேளையில் ஆறாம் ஆண்டு கல்வியை முடித்து இடைநிலை பள்ளிக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கெளரவித்தது, தனக்கும் தன் குழுவினருக்கும் பெரும் மகிழ்ச்சி என பள்ளி வாரிய தலைவர் திரு நந்தா தெரிவித்தார்.


