
தஞ்சோங் மாலிம் ஜன 20
தமிழ்க் கல்விப் புத்தாக்க போட்டி தமிழ் மொழியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
தமிழ்க் கல்விப் புத்தாக்க போட்டியில் வாயிலாக தமிழின் எதிர்காலத்தை நம்மால் வடிவமைக்க முடியும் என்றார் அவர்.
இன்று இங்கு சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தில் புத்தாக்க திட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
இந்த போட்டியில் அதிகமான இளைஞர்கள் பங்கு பெறுவதைக் கண்டு தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.
தமிழ் என்பது வெறும் ஒரு மொழியல்ல. தமிழ் ஒரு களஞ்சியம். தமிழ் இலக்கியம் கலை மட்டுமல்லாது இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பம் என எல்லாத் துறைகளிலும் பீடு நடை போட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் போட்டியின் மூலம் நாம் தமிழை இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாமல் எதிர்கால தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் ஒரு பணியை நாம் மேற்கொண்டு வருகிறோம் என அவர் சுட்டிக் காட்டினார்.
அதிலும் நாளைய தமிழ் ஆசிரியர்களாக உருவாகவிருக்கும் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய கடப்பாடு உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் தமிழ் துறை மாணவர்களின் ஆர்வமும் புத்தாக்க திறனும் பாராட்டக் கூடியது.

மேலும் புத்தாக்கம் முன்னேற்றத்தின் அடித்தளம் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த போட்டி, தமிழ்க் கல்வியை புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாகும்.
இது ஒரு வெறும் போட்டி அல்ல. தமிழில் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு தளமாகும் என அவர் தெரிவித்தார்.
இந்தப் போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் வளர்தமிழ் மன்றம் மற்றும் தமிழ் துறை மாணவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
குறிப்பாக சகோதரர் தீவேஷ் நாகராஜன் தலைமையிலான செயல் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள் என செனட்டர் சரஸ்வதி குறிப்பிட்டார்.


