Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பயணிகளுக்கு கூடுதல் சலுகை வழங்க பாத்தேக் ஏர் கிளப் அறிமுகம்!

சுபாங் ஜன 20
புள்ளிகளின் வழி தனது பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளை வழங்க பாத்தேக் ஏர் அனைத்தும் புதிய பாத்தேக் ஏர் கிளப்பை அறிமுகம் செய்துள்ளது.
இந்த கிளப்பின் அடிக்கடி பயணிக்கும் திட்டத்தின் வழி, பாத்தேக் ஏர் பயணிகள் அதிகமான சலுகைகளை பெறலாம்.
ஏற்கனவே மலின்டோ மைல்ஸ் என்றழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் பயணிகள் புள்ளிகள் உட்பட கூடுதல் சலுகைகளை பெறலாம்.
அடிக்கடி பயணிக்கும் பயணிகள் மட்டுமின்றி, முதல்முறையாக பயணிக்கும் பயணிகளுக்கும், விமான பயணங்களுக்கு அப்பாற்பட்ட சலுகைகளை பாத்தேக் ஏர் கிளப் வழங்குகிறது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் பாத்தேக் ஏர் பயணிகளுக்கு அருமையான சலுகைகள் மற்றும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
இந்த புதிய திட்டத்தில் சேகரிக்கப்படும் புள்ளிகளைக் கொண்டு பாத்தேக் ஏரிடம் இலவச விமான டிக்கெட்டுகளை பயணிகள் மாற்றிக் கொள்ளலாம்.
இது மட்டுமின்றி லையன் ஏர் குழும நிறுவனத்திற்கு உட்பட்ட அனைத்து விமானங்களிலும் இலவச டிக்கெட் களை பயணிகள் மாற்றிக்கொள்ளும் சலுகைகள் உண்டு.


இத்திட்டத்தில் பாத்தேக் ஏர் மலேசியா இணையத்தின் வழி கொள்முதல் செய்யப்படும் டிக்கெட்டுகளின் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகள் வழங்கப்படும்.
பாத்தேக் ஏர் பங்காளி வங்கிகளின் கிரெடிட் கார்டுகளில் பொருட்களை வாங்கினால் அதற்கு ஏற்ப புள்ளிகள் பயணிகளுக்கு வழங்கப்படும்.
பயணிகள் 25 விழுக்காடு புள்ளிகளைப் பெற வாய்ப்புகள் உண்டு.
இந்தத் திட்டத்தில் மலின்டோ மைல்ஸ் புள்ளிகளை பாத்தேக் ஏர் கிளப் புள்ளிகளில் நாங்கள் பரிமாற்றம் செய்கின்றோம்.

மாற்று விகிதம்
1,000 மலின்டோ மைல்ஸ் புள்ளிகள்:10 பாத்தேக் ஏர் கிளப் புள்ளிகள்
மீட்பு புள்ளிகளின் மதிப்பு: 1 பாத்தேக் ஏர் கிளப் புள்ளி=வெ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular