
லார்க்கின் ஜன 20
மஇகா ஜொகூர் பாரு தொகுதியின் ஒற்றுமை பொங்கல் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மஇகா ஜொகூர் பாரு தொகுதியின் தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் லார்க்கின் வட்டார இந்திய சமுதாயத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ராவின் குமார், தேசிய மஇகா மகளிர் அணி தலைவியும் கெமெலா சட்டமன்ற உறுப்பினருமான சரஸ்வதி ஆகிய இருவரும் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
இந்த ஒற்றுமை பொங்கல் வட்டாரத்தில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே இருந்து வரும் ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை வெளிப்படுத்துவதாக ஜெயசீலன் தமது உரையில் கூறினார்.
நமது இந்திய சமூகத்தினர் பாரம்பரிய கொண்டாட்டங்களை ஒருபோதும் மறந்து விடக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.
இந்த அறுவடை திருநாள் நம்மிடையே இருந்து வரும் ஒற்றுமையை வலுப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.


