
இங்குள்ள ஜொகூர் பாரு அருள்மிகு ராஜமாரியம்மன் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பிரார்த்தனை சிறப்பாக நடைபெற்றது
ஜொகூர் அரசு மலேசியா சுங்கத்துறையைச் சேர்ந்த முன்னாள் இந்திய ஊழியர்கள் இந்த பிரார்த்தனையை ஏற்பாடு செய்தனர்.
முன்னாள் அரச மலேசிய சுங்கத்துறை அதிகாரி கிருபழனி தலைமையில் இந்த பிரார்த்தனை நடைபெற்றது.
55 ஆவது ஆண்டாக இந்த பிராத்தனையை தாங்கள் செய்து வருவதாக கிருபழனி கூறினார்.
இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினருக்கும் மற்றும் ஆலய நிர்வாகத்திற்கும் தாங்கள் நன்றி கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.


