
இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர்,’இளஞ்சிவப்பு நகரம்’ என பிரியத்துடன் அழைக்கப்படும் ஒரு நகரமாகும்.
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூர் அனைத்துலக சுற்றுப்பயணிகளை அதிகமாக கவர்ந்து வருகிறது.
மிதமான பாலைவனப் பிரதேசத்தில் எழுந்துள்ள ஜெய்ப்பூருக்கு ஏர் ஆசியா கோலாலம்பூரிலிருந்து நேரடி விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நேரடி விமான சேவையின் மூலம் கோலாலம்பூரிலிருந்து அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயனைகள் அழகிய ஜெய்பூருக்கு படையெடுக்கின்றனர்.
‘வாஸ்து சாஸ்த்ராவை’ பின்பற்றி உருவாக்கப்பட்ட முதல் நகரம்
‘வாஸ்து சாஸ்த்ரா’ எனும் இந்திய கட்டுக்கலை விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட முதல் நகரம் ஜெய்ப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து கட்டு கலை மரபின் உதாரண வடிவமாக ஜொலிக்கும் இந்த மாநகரம் ‘பீடபாதா’ எனும் நவமண்டல (ஒன்பது கட்டங்கள்) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வான சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றிருந்த மகாராஜா இரண்டாம் ஜெய்சிங் நவகிரகங்களில் எண்ணிக்கையான 9 மற்றும் அதன் அடுக்குகள் (9X) வரும்படியாக இந்த நகரத்தின் மண்டலங்களை வடிவமைத்துள்ளார்.
ஜெய்ப்பூர் நகரம் தனது கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் ஹவேலி மாளிகைகள் ஆகிய சிறப்பு அம்சங்கள் மூலம் உலகெங்கிலுமிருந்து சுற்றுப் பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

இந்த வரலாற்று தலத்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலை அம்சங்களை தரிசிக்க எங்கோ ஒரு மூலிகை வசிக்கும் சுற்றுலாப்பிரியர்கள் கூட ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.
ஆம்பேர் கோட்டை, நஹார்கர் கோட்டை, ஹவா மஹால்,ஷீஷ் மஹால்,ஜல் மஹால் மற்றும் கணேஷ் போல் போன்றவை இந்த நகரத்தின் புகழ்பெற்ற சுற்றுலா அம்சங்களாகும்.
திருவிழா சந்தைகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்கள் கோட்டைகள் மற்றும் அரண்மனைகளைத் தவிர ஜெய்ப்பூர் நகரம் பலவிதமான திருவிழா சந்தைகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களுக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது.
இவற்றில் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் ‘ஜெய்ப்பூர் வின்டேஜ் கார் ராலி’ மிகவும் புகழ்பெற்ற ஒரு நிகழ்வாகும்.
சமீப காலமாக இந்த நிகழ்வு அதிக அளவு பார்வையாளர்களையும் சுற்றுப்பயணிகளையும் ஈர்த்து வருகிறது.
கார் ரசிகர்கள் பழைய அற்புதமான மெர்சிடிஸ், ஆஸ்டின் மற்றும் ஃபியட் மாடல் கார்களை இந்த ‘ராலி’யில் பார்த்து ரசிக்கலாம். இவற்றில் சில மாடல் கார்கள் 1900 ஆம் ஆண்டு தயாரிப்புகள் என்பது ஆச்சரியமான தகவலாகும்.
ஹோலிப்பண்டிகை நாளில் கொண்டாடப்படும் யானை திருவிழா ஜெய்ப்பூரில் மற்றொரு பிரசித்தமான திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
வண்ண மயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அழகிய யானை ஊர்வல நிகழ்ச்சிகள் போன்றவற்றை இந்நாளில் கண்டு களிக்கலாம்.
இதைத் தவிர,’கண்கௌர் பூஜா’ எனப்படும் பண்டிகையும் ஜெய்பூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
‘கண்’ என்பது சிவபெருமானையும் ‘கௌர்’ என்பது அவரது துணைவியார் பார்வதியையும் குறிப்பிடுவதாகும்.
திருமண பந்தத்தில் மகிழ்ச்சியை குறிக்கும் விதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பன்கங்கா சந்தை திருவிழா, தீஜ்,ஹோலி மற்றும் சக்சு சந்தை போன்றவை இதர பிரசித்தமான பண்டிகைகளாக இங்கு கொண்டாடப்படுகிறது.
இயற்கைப் பிரதேசங்களை சுற்றிப் பார்க்கும் விருப்பமுள்ளவர்கள் கரௌளி மற்றும் ரன்தம்பூர் தேசிய பூங்கா போன்று இடங்களுக்கு விஜயம் செய்து மகிழலாம்.
ஜெய்பூர் நகரம் சுற்றுலா பயணிகளுக்கு அற்புதமான ஷாப்பிங் அனுபவத்தை அளிக்கிறது. இங்கு பலவிதமான பழமை பொருட்கள், பாரம்பரிய ஆடைகள் மற்றும் நவீன பிரபல பிராண்டுகளின் உடைகளையும் எம்.ஐ ரோடு பகுதியில் சுற்றுப்பயணிகள் வாங்கலாம்.
ஜெய்ப்பூர் உள்ளூர் மார்க்கெட் பகுதிகளில் பொருட்கள் வாங்கும் போது சுற்றுப்பயணிகள் பேரும் பேசி வாங்குவது சிறந்தது.
உணவுச் சுவைக்கு ஜெய்ப்பூர் புகழ்பெற்று விளங்குகிறது. காரமான உணவு வகைகள் அதிகம் கவர்கிறது. வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கப்பட்ட கார உணவுகள் இங்கு பிரசித்தம். தால் பாடி-சூர்மா,பியாஸ் கி கச்சோரி, கெபாப்,முர்க் கோ காட்டோ மற்றும் ஆச்சாரி முர்க் போன்றவை இங்கு கிடைக்கும் விசேஷமான உணவு வகைகளில் குறிப்பிடத்தக்கவையாகும். ஜெய்பூரின் அழகைக் காண அற்புதமான வாய்ப்பு
இதனிடையே ஜெய்ப்பூர் நகரின் அழகை கண்டு ரசிக்க ஏர் ஆசியா அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளதாக ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் தலைமை விமான மற்றும் வாடிக்கையாளர்கள் அனுபவ அதிகாரி கேசவன் சிவானந்தம் கூறினார்.
கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு ஏர் ஆசியாவின் நேரடி விமான சேவை சுற்றுப்பயணர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு என்றார் அவர்.
இந்தியாவின் பிரசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றான ஜெய்ப்பூர் பல சிறப்பு அம்சங்களை கொண்ட ஒரு நகரமாகும்.
இந்த நகரில் உள்ள பழமையான கோட்டைகள், அரண்மனைகள் கட்டிடங்கள் சுற்றுப்பயணிகளை அதிகம் கவரும் என அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் இங்கு கண் கவரும் திருவிழா சந்தைகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்கள் சுற்றுப்பயணிகளை அதிகம் மகிழ வைக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த நகரில் பலவிதமான உணவுப் பொருட்களை சுவைத்து ரசிப்பது விசேஷமான ஒன்றாகும்.
கோலாலம்பூரிலிருந்து ஏர் ஆசியா வழங்கி வரும் மலிவான கட்டணத்தில் இங்குள்ள உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுப்பயணிகள் ஜெய்ப்பூரின் அழகை கண்டு ரசிக்கலாம் என அவர் தெரிவித்தார்.
ஏர் ஆசியா ஜெய்ப்பூர் நகருக்கு வாரத்திற்கு 4 விமான சேவைகளை வழங்கி வருகிறது.


