Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

திரெங்கானு இந்து மத மன்றத்தின் ஆதரவில் பொங்கல் கொண்டாட்டம்

கோலா திரெங்கானு 19
திரெங்கானு இந்து மத மன்றம், பரதம் கலாச்சார கிளாப் ஆகிய தரப்பினர் திரெங்கானு மாநில சமூக நல, மகளிர் மேம்பாடு மற்றும் தேசிய ஒற்றுமை பிரிவு அலுவலகத்தின் ஆதரவுடன் பொங்கல் கொண்டாட்டத்தை வெகு சிறப்பாக நடத்தினர்.
இந்த பொங்கல் கொண்டாட்டத்தை திரெங்கானு மந்திரி பெசாரின் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான சிலப்பதிகாரி டாக்டர் கோ. பாலச்சந்திரன் தொடங்கி வைத்தார்.


பாஸ் கட்சியின் தலைமையிலான திரெங்கானு மாநில அரசாங்கம் இஸ்லாம் அல்லாத மதத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருவதை இந்த பொங்கல் கொண்டாட்டம் காட்டுவதாக டாக்டர் பாலச்சந்திரன் தமதுரையில் கூறினார்.
திரெங்கானு மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் எவ்வித தடையுமின்றி தங்களின் சமய நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.


திரெங்கானுவில் முஸ்லிம் அல்லாதவர்கள் எவ்வித நெருக்குதலுமின்றி சுதந்திரமாக தங்களின் வழிபாட்டை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
பாஸ் அரசாங்கம் இதர சமயத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாஸ் கட்சிக்கு எதிராக சில பொறுப்பற்ற தரப்பினரின் பொய்யான பிரச்சாரங்களை நிராகரிக்குமாறு இந்திய சமூகத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
யுஎம்டியில் நடந்த இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் சுமார் 300 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular