
செப்பாங் ஜன 3
சபரிமலைக்கு செல்லும் தனது பயணிகளின் முதல் கட்டமாக 100 ஐயப்ப பக்தர்கள் இன்று பாத்திக் ஏரில் புறப்பட்டனர்.
இன்று காலை 9.30 மணிக்கு பாத்திக் ஏரில் திருச்சிக்கு புறப்பட்ட பயணிகளுக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாத்திக் ஏர் அதிகாரிகள் அன்பளிப்பு கைப்பைகளை வழங்கினர்.
சபரி மலைக்கு செல்லும் முதல் கட்ட 100 பக்தர்களை அனுப்பி வைப்பதில் தாங்கள் பெருமை கொள்வதாக பாத்திக் ஏர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மலேசியாவிலிருந்து இந்த யாத்திரிக பயணத்திற்கு ஆதரவு வழங்குவதில் பாத்திக் ஏர் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே கேஎல்ஐஏ விமான நிலையத்தில் சிறப்பு சலுகைகளுடன் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர்.
இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலத்தில் சபரிமலைக்கு புறப்பட்ட ஐயப்ப பக்தர்களை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சார்பில் நெகிரி செம்பிலான் ஆட்சி குழு உறுப்பினரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான ஜ. அருள்குமார் வழியனுப்பி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இங்கிருந்து சபரிமலைக்கு செல்வதாக அருள்குமார் கூறினார்.
இதனிடையே சபரிமலைக்கு புறப்படும் ஐயப்ப பக்தர்களுக்கு கேஎல்ஐஏ விமான நிலையத்தில் போக்குவரத்து அமைச்சின் ஒத்துழைப்புடன் சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கூறினார்.
மேலும் குடிநுழைவு சோதனை இடங்களில் சிறப்பு வழித் தொடங்கும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இதன் வாயிலாக ஐயப்ப பக்தர்கள் முழு வசதியுடன் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர் என்றார் அவர்.
அதே வேளையில் ஐயப்ப பக்தர்களை அழைத்துச் செல்லும் மலேசியா ஏர்லைன்ஸ்,பாத்திக் ஏர் மற்றும் ஏர் ஆசியா ஆகிய விமான நிறுவனங்களுக்கு அவர் நன்றி கூறினார்.
இந்த வலியனுப்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சின் வான் போக்குவரத்து பிரிவின் செயலாளர் முகமட் ரிட்ஸ்வான் மற்றும் மலேசிய ஏர்போர்ட் நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


