
கோலாலம்பூர் ஜன 3
பாஸ் பாசாங்கு தனமான மற்றும் ஒரு இனவாத கட்சி என பாக்காத்தான் ஹராப்பன் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் சாடினார்.
தனது அரசியல் லாபத்திற்காக சூழ்நிலைக்கு ஏற்ப நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் ஒரு கட்சி என அவர் சுட்டிக் காட்டினார்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்கின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மீதான அறிக்கையை தனது அரசியல் லாபத்திற்காக அந்த கட்சி திரித்து கூறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதர மதங்களுக்கு எதிராக அவ்வப்போது பாஸ் கடுமையான விமர்சனங்களை செய்து வருவதாக அவர் சொன்னார்.
நடப்பு அரசாங்கத்தில் முஸ்லிம் அல்லாத குறிப்பாக ஜசெக அமைச்சர்களை சாடி வருவதே இந்த கட்சியின் நிலைப்பாடாக இருந்து வருவதாக அவர் சொன்னார்.
ஙா கோர் மிங் தமது அமைச்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியது இந்த கட்சி ஒரு சர்ச்சையாக உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
அப்படியானால் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியை அந்த அமைச்சில் நடத்தினால் பாஸ் கட்சியின் நிலைப்பாடு இது தானா? என அவர் கேள்வி எழுப்பினார்.
பால இனங்கள் அமைதியும் மற்றும் நல்லிணக்கத்தையும் கடைப்பிடித்து வரும் இந்நாட்டில் பாஸ் கட்சி இனவாத போக்கை கடைபிடித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக தான் பாஸ் மாதங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஏற்கனவே சாடியிருந்தார் என அவர் குறிப்பிட்டார்.


