Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சியாங் மாய் நகரின் பசுமையான கரேன் கிராமம்…!

வட தாய்லாந்தின் மிகப் பெரிய நகரமான சியாங் பல சிறப்பு அம்சங்களை கொண்ட ஒரு அற்புத நகரமாகும்.
இந்த நகரில் உள்ள இன்தானொன் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் இயற்கை அழகு மற்றும் பசுமையை கொண்ட கரேன் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் நெல் வயல்கள் சுற்றுப் பயணிகளை அதிகமாக கவர்ந்து வருகிறது.
இங்கு வாழும் மக்கள் விவசாயம் மற்றும் சுற்றுலா துறையை தான் வாழ்நாளை கழித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு வருக புரியும் சுற்றுப்பயணிகள் இங்கு தங்கி ஓய்வெடுக்கவும் சுற்றுச் சூழலை பார்த்து ரசிக்கவும், தங்கும் வசதிகள் உள்ளன.
அழகான முறையில் மரப்பலகையால் கட்டப்பட்ட வீடுகளில் அனைத்து வசதிகளும் உள்ளன.


இங்கு வருகை புரியும் சுற்று பயணிகள் இந்த வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து இந்த கிராமத்திற்கு அருகாமையில் உள்ளூர் காப்பி மரங்கள் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த மரங்களில் வளரும் காப்பி விதைகளில் தயாரிக்கப்படும் காப்பி நீர் சுற்றுப்பயணிகளுக்கு விருந்தாக அமைகிறது.
இந்த மரங்களிலிருந்து பறிக்கப்படும் காப்பி விதைகள் வறுக்கப்பட்டு, காப்பி தயாரிக்கப்படுகிறது.


இந்த காப்பியை அருந்த சுற்றுப்பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
காரணம் இந்த காப்பியின் சுவை அவ்வளவு ருசியாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
அதேவேளையில் சுற்று பயணிகள் பாக்கெட்டுகளில் விற்கப்படும் இந்த காபி தூள்களை வாங்கிச் செல்லலாம். பழமை வாய்ந்த இந்த கரேன் கிராமத்து மக்கள் மிக எளிமையான, ஆனால் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இங்கு வருகை புரியும் சுற்றுப்பயணிகளை இன்முகத்தோடு வரவேற்று உபசரிக்கின்றனர்.
இந்த கிராமத்து மக்கள் உப வருமானத்திற்காக கோழி, வாத்து போன்றவற்றை வளர்த்து வருகின்றனர்.


கரேன் கிராமத்திற்கு வருகை புரியம் சுற்றுப்பயணிகள் ஒரு சில நாட்கள் இங்கேயே தங்கி இங்குள்ள கிராமத்து வாழ்க்கையை கண்டு ரசிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular