Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாத்திக் ஏர் நாளை முதல் திருச்சிக்கு தினசரி 2 பயணங்கள்

சுபாங் டிச 13
பாத்திக் ஏர் நாளை டிச 14 ஆம் தேதி சனிக்கிழமை முதல் திருச்சிக்கு தினசரி 2 பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறது.
கோலாலம்பூர்-திருச்சி முதலாவது விமான சேவை காலை 9.30 மணிக்கு இரண்டாவது விமான சேவை இரவு 8.10 மணிக்கும் மேற்கொள்ளப்படும் என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
தமிழ்நாட்டுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு கண்டு வருவதால், திருச்சிக்கான தினசரி விமான சேவை இரண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


அதேவேளையில் இது விடுமுறை காலம் என்பதால் இந்த விமான சேவை அதிகரிப்பு ஏதுவாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பாத்திக் ஏர் வரும் காலங்களில் இந்தியாவில் தொடர்ந்து வலிமையாக கால் பதித்து வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது பயணிகளுக்கு சமூகமான பயண வசதிகளை ஏற்படுத்தி தருவதில் பாத்திக் ஏர் முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது பாத்திக் ஏர் இந்தியாவில் புது டெல்லி, மும்பை, திருச்சி, அம்ரித்சர், பெங்களூர், கொச்சி ஆகிய நகர்களுக்கு விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular