Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உயர்கல்வி மாணவர்களுக்கு மலிவு கட்டண டிக்கெட்டுகளை வழங்க ஏர் ஆசியா உறுதியாக உள்ளது

செப்பாங் டிச 13
உயர் கல்வி நிலைய மாணவர்களுக்கு மலிவு கட்டண டிக்கெட்டுகளை வழங்கும் தனது நிலைப்பாட்டில் உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா உறுதியாக உள்ளது.
போக்குவரத்து அமைச்சின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் ஏர் ஆசியா தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியா இடையே 52 நகர்களுக்கு இந்த மலிவு கட்டணத்தை வழங்குகிறது.
தங்கள் நகர்களுக்கு திரும்பும் உயர் கல்வி நிலைய மாணவர்களுக்கு தொடர்ந்து மலிவான கட்டணத்தை ஏர் ஆசியா வழங்கும்.
தீபகற்ப மலேசியாவிலிருந்து கோலாலம்பூர் ஜொகூர் பாரு, கோத்தா பாரு மற்றும் பினாங்கு மற்றும் கிழக்கு மலேசியாவிலிருந்து கோத்தா பாரு,கூச்சிங்,தாவாவ்,பிந்துலு,மீரி,சீபு,சான்டகான்,லாபுவான் ஆகிய நகர்களுக்கு FLYsiswa திட்டத்தின் ஏர் ஆசியாவின் பற்று சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதனிடையே ஏர் ஆசியா ‘மக்களின் விமானம்’ என்பதால் உயர் கல்வி மாணவர்களுக்கு உதவும் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களுக்கும் தாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்க தயார் என ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின்(விமான பணிகள்) துணை தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் செஸ்தர் வூ கூறினார்.
இதுவரை இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் அரசாங்க பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து 21,000 விண்ணப்பங்களை தாங்கள் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இவற்றில் இதுவரை 80 விழுக்காட்டினார் மலிவு கட்டண டிக்கெட் களுக்கான பற்றி சீட்டுகளை பெற்றுள்ளதாக அவர் சுட்டி காட்டினார்.
உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை வெ 400 ஆக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் ஜன 1 ஆம் தேதி முதல் உயர் கல்வி நிலைய மாணவர்கள் மலிவு கட்டண டிக்கெட்டுகளில் தங்களின் நகர்களுக்கு பயணிக்கலாம் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பற்று சீட்டுக்கு விண்ணப்பிக்க ஏர் ஆசியா எதிர்வரும் டிச 22 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular