Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜொகூர் பாரு அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது

ஜொகூர் பாரு டிச 13
ஜொகூர் பாரு அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் 6 ஆவது மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக கொண்டாட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்த கும்பாபிஷேக கொண்டாட்டத்தில் சிறப்பு பிரமுகர்களாக ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ராவின் குமார் மற்றும் கெமலா சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவர்களுக்கு ஆலய தலைவர் மேகநாதன் கௌரவிப்பு செய்தார்.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நண்பகல் உணவு பரிமாறப்பட்டது.


லார்க்கின் ஸ்ரீ விநாயகர் ஆலய தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்த கும்பாபிஷேகம் கொண்டாட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் ஆலய தலைவர் மேகநாதன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular