Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த சீதாலட்சுமி, யோகிஷா கௌரவிக்கப்பட்டனர்

கூலிம் டிச 12
அனைத்துலக மற்றும் ஆசிய நிலையில் கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த சீதாலட்சுமி குமார் மற்றும் யோகிஷா தனபாலன் ஆகியோரை கெடா கராத்தே கழகம் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தது. அண்மையில் மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீதா லட்சுமி குமார் 2024 உலக புனோகொஷி சோத்தொகான் கராத்தே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி ப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அதே வேளையில் ஜாலான் புக்கிட் காஜாங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த யோகிஷா தனபாலன் அண்மையில் ஆசியான் அனைத்து உலக சாமுராய் கராத்தே போட்டியில்
தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தார்.
தாங்கள் பங்கு பெறும் அனைத்து கராத்தே போட்டிகளிலும் சீதா லட்சுமி குமார் மற்றும் யோகிஷா தனபாலன் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருவதாக அவர் சொன்னார். இவர்கள் மேலும் கராத்தே போட்டியில் சாதனை படைக்க கெடா கராத்தே கழகம் வாழ்த்துவதாக அவர் சொன்னார்.


கராத்தே போட்டிகளில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்ச்சி இங்குள்ள கோல்டன் ஹாஸ் உணவகத்தில் கடந்து சில தினங்களுக்கு முன் நடைபெற்றததாக கெடா கராத்தே கழகத்தின் தலைமைப் பயிற்சியாளர் மாஸ்டர் விஜய் கூறினார்.
கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் கோசி எஸ். ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்ச்சியை மாநில மனித வளம், இந்தியர், சீனர், சயாமியர் சமூக விவகாரம், அரசு சார்பற்ற இயக்கங்கள் துறை ஆட்சி குழு உறுப்பினர் வோங் சியா ஸென் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular