
கோலாலம்பூர் டிச 2
தலைநகர், தித்திவங்சாவில் நடைபெற்ற 2024 கோலாலம்பூர் மேயர் அனைத்துலக கராத்தே போட்டியில் கெடா 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.
இந்த போட்டியில் கெடா கராத்தே சங்கத்தை சேர்ந்த ரிஷாலினி குமார் மற்றும் யோகி சா தனபாலன் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தனர்.
தித்திவங்சா அரங்கில் நடந்த இந்த போட்டியில் 19 வயதுடைய ரிஷாலினி குமார் பெண்களுக்கான சீனியர் காத்தா பிரிவில் வெள்ளி மற்றும் பெண்களுக்கான சீனியர் குமித்தே பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
இந்த போட்டியில் ஜாலான் புக்கிட் காஜாங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த யோகிஷா தனபாலன் பெண்களுக்கான ஜூனியர் குமித்தே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த போட்டியில் மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெடா கராத்தே சங்கத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி குமார் நடுவராக சிறப்பாக பணியாற்றினார்.
இந்த போட்டியில் மலேசியா, இந்தியா வங்காளதேசம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 564 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.
இந்தப் போட்டியின் ஏற்பாட்டாளர் சிஹான் டத்தோ தியாகு பொன்னையா, கெடா கராத்தே கழகத்தின் தலைவர் கியோஷி டாக்டர் ஸ்டாலின், துணைத் தலைவர் டத்தோ என்டி, பயிற்சியாளர் டாக்டர் ராமன் நாயர், வெற்றியாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் கியோஷி மாஸ்டர் விஜய் நன்றி கூறினார்.


