Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கோலாலம்பூர்-சண்டகானுக்கு பாத்திக் ஏர் நேரடி விமான சேவை!

செப்பாங் டிச 2
கோலாலம்பூர் மற்றும் சபாவின் இயற்கை அழகை நிரம்பி வழியும் நகரான சண்டானுக்கு பாத்திக் ஏர் நேற்று டிச 1ஆம் தேதி நேரடி விமான சேவையை தொடங்கியது.
பாத்திக் ஏர் சபாவிற்கு சிறகடிக்கும் மூன்றாவது நகரம் இதுவாகும்.
ஏற்கனவே சபாவில் கோத்தா கினபாலு மற்றும் தாவாவ் ஆகிய நகர்களுக்கு பாத்திக் ஏர் தனது விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.
போர்னியோ தீவின் வடக்கிழக்கு நகரான சண்டானுக்கு பாத்திக் ஏர் வாரத்திற்கு 14 விமான சேவைகளை மேற்கொள்ள இருக்கிறது.
சண்டகான் இயற்கை அழகை அள்ளித் தருவதோடு, இங்கு தனித்துவமான வன விலங்குகளை சுற்று பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
புகழ்பெற்ற செபிலோக் ஓராங்ஊத்தான் மறுவாழ்வு மையம் இந்த நகரில் தான் அமைந்துள்ளது.


பாத்திக் ஏரின் இந்த புதிய விமான சேவை மலேசியா மற்றும் அனைத்துலக சுற்றுப்பயணிகளை போர்னியோ தீவிற்கு இணைக்கிறது.
போர்னியோவின் வனவிலங்கு நுழைவாயில் என்று புகழ் பெறும் சண்டகானில் கடலாமை தீவு பூங்கா ,சண்டகான் நினைவு பூங்கா உட்பட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. சண்டகான் சபாவில் ஒரு பொருளாதார மையமாக விளங்கி வருகிறது. குறிப்பாக செம்பனை மற்றும் மீன் வளர்ப்பு துறைகளில் இந்த நகரும் துரித வளர்ச்சியை கண்டு வருகிறது.
பாத்திக் ஏர் சுற்றுலாத்துறைக்கு ஆதரவு வழங்கி வருவது மட்டுமின்றி, சபா மற்றும் மேற்கு மலேசியாவிற்கிடையே வர்த்தக பயணத்தை வலுவடைய செய்து வருகிறது.
இதனிடையே கோலாலம்பூர்-சண்டகான் நேரடி விமான சேவை, சபாவின் தொடர் வளர்ச்சிக்கு துணை புரியும் என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
மலேசியா மற்றும் அனைத்துலக சுற்றுப்பயணிகள் கிழக்கு மலேசியாவின் வியக்க வைக்கும் இயற்கை அழகு மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை எளிதில் கண்டு கழிக்க இந்த புதிய விமான சேவை உதவும் என அவர் சுட்டிக்காட்டினார்.
விடுமுறை காலம் நெருங்கி வருவதால் மலேசியா மட்டும் அனைத்துலக சுற்றுப்பயணிகள் சபாவின் அழகை கண்டு ரசிக்க இந்த புதிய விமான சேவை பொருத்தமான நேரத்தில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிழக்கு மலேசியா நகரங்களுக்கு பாத்திக் ஏர் தொடர்ந்து வலுவாக கால் பதித்து வரும் என டத்தோ சந்திரன் ராம மூர்த்தி தெரிவித்தார்.
இதனிடையே மேற்கு மலேசியாவுடன் சபாவை இணைக்க பாத்திக் ஏரின் இந்த புதிய விமான சேவையை தாம் வரவேற்பதாக சபா சுற்றுலா, கலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ கிறிஸ்டினா லீவ் கூறினார்.


இந்த புதிய விமான சேவை உள்ளூர் மக்களுக்கு பல வழிகளில் உதவும் என அவர் சுட்டிக் காட்டினார். உள்நாட்டு வருகை ன அதிகரிப்பதோடு உள்ளூர் பொருளாதாரம் நடவடிக்கைகள் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
நேற்று கோலாலம்பூரிலிருந்து பாத்திக் ஏர் விமான மூலம் சண்டகான் விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகளுக்கு பாரம்பரிய மாலைகள் வழங்கி வரவேற்கப்பட்டனர்.
இந்த பயணிகளை சண்டகான் நாடாளுமன்ற உறுப்பினர் விவியன் சோங், சபா சுற்றுலாத்துறை தலைமை செயல்முறை அதிகாரி ஜூலினஸ் ஜெப்ரி உட்பட பல பிரமுகர்கள் அன்புடன் வரவேற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular