Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

12ஆவது ஆண்டாக உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமாக ஏர் ஆசியா தேர்வு!

தொடர்ந்து 12 ஆவது ஆண்டாக உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமாக ஏர் ஆசியா எக்ஸ் தேர்வு செய்யப்பட்டது.
போர்ச்சுகல், மடிராவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு உலக விமான பயண விருது விழாவில் ஏர் ஆசியா தொடர்ந்து 12 ஆவது ஆண்டாக இந்த விருதை தட்டி சென்றது. இவ்விரு பிரிவுகளுக்கான விருதுகள் போட்டியில் போட்டியிட்ட இதர 15 விமான நிறுவனங்களை பின்தள்ளி ஏர் ஆசியா முதலாம் இடத்தை பிடித்தது.
விமான தொழில்துறை நிறுவனங்கள், பயணிகள் மற்றும் விமான போக்குவரத்து நிபுணர்கள் ஏர் ஆசியாவிற்கு பெரும்பான்மை வாக்குகள் அளித்து முதல் நிலை அந்தஸ்தை தந்தனர்.
ஏர் ஆசியா தொடர்ந்து இன்னும் அதிகமான இரண்டாம் நிலை விமான நிறுவனங்களை இணைக்கவும், 2027 ஆம் ஆண்டிற்குள் ஆசியா பசிப்பிக்கில் வலுவாக கால் பதிக்கவும் வியூகத் திட்டங்களை வழி வகுத்து வருகிறது.
இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் இந்த உயரிய விருதை பெற்று வருவது, ஏர் ஆசியாவின் வலுவான செயல் நடவடிக்கைகளை காட்டுவதாக ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.


இதர உலகளாவிய விமான நிறுவனங்களை கடந்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை உலகின் மலிவு கட்டண விமான பொருமையமாக உருவாக்கி ஏர் ஆசியா வெற்றி கண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
லட்சக்கணக்கான பயணிகள் மலிவு கட்டணத்தில் தாங்கள் விரும்பும் நகர்களுக்கு பயணிக்க வைப்பது தான் எங்களின் இலக்கு என்றார் அவர்.
‘எங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு, விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உட்பட பல வியூகத் திட்டங்களை வகுத்துள்ளோம்’ என அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த வெற்றிக்கு சம்பந்திகளின் பங்களிப்பே பிரதான காரணம் என விமான சிப்பந்திகளுக்கான ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சுஹாய்லா ஹாசான் கூறினார்.


எங்களின் செயல் திட்டங்கள் அதிகரித்து வருவதால், ஆயிரக்கணக்கான புதிய விமான சிற்பந்திகளை வரவேற்க தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
எங்களின் ஒவ்வொரு பயணியும் பாதுகாப்பான பயணத்தை எதிர்பார்ப்பது மட்டுமின்றி, எங்களின் தரமான சேவைகளையும் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
எங்களுக்கு கிடைத்த இந்த வெற்றி, தொடர்ந்து உலக தர சேவையை பயணிகளுக்கு வழங்க ஊக்கத்தை தருவதாக அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular