Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கெமெலா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி உபசரிப்பு!

ஜொகூர் பாரு நவ 26
மஇகா மகளிர் அணி தலைவியும் கெமெலா சட்டமன்ற உறுப்பினருமான சரஸ்வதியின் தீபாவளி உபசரிப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீபாவளி உபசரிப்பில் பல இனங்களைச் சேர்ந்த பங்சா ஜொகூர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தீபாவளி கொண்டாட்டம் இந்தியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து இனங்களுக்கும் இது ஒரு கொண்டாட்டம் என்பதை இவர்கள் நிரூபித்தனர்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பல சுவையான உணவு உபசரிக்கப்பட்டது.


இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சரஸ்வதி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு, நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
பங்சா ஜொகூர் மக்கள் ஒற்றுமையுடன் மட்டும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பல இனங்கள் வாழும் பங்சா ஜொகூர் மக்களிடையே புரிந்துணர்வு மற்றும் சகிப்புத்தன்மை மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இந்த கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், அரசு சார்பற்ற இயக்கங்களின் பிரதிநிதிகள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular