
(ஆர்.சுப்ரா)
தம்போய் நவ 25
தம்போயில் பங்சா ஜொகூர் மக்களுடன் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தீபாவளி ஒரு கொண்டாட்ட நாள் மட்டுமின்றி, பங்சா ஜொகூர் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு திருநாளில் டத்தோ ஓன் ஹபிஸ் கூறினார்.
அது மட்டுமின்றி இந்திய சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அணுக்கமாக தெரிந்து கொள்ளும் ஒரு திருநாள் என அவர் குறிப்பிட்டார்.
நாம் மதம் மற்றும் இனத்தால் வேறுபட்டிருந்தாலும், அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்வதில் ஒன்றுபட்டுள்ளோம் என்றார் அவர்.
இந்த தீபத் திருநாள் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளத்தை தர நாம் பிரார்த்திப்போம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் ஜொகூர் மாநில மஇகா தலைவரும் மாநில அரசாங்கம் ஆட்சிக்குழு உறுப்பினருமான ரவீன் குமார், துணைத் தலைவர் நிலா ராஜா, ஜொகூர் போலீஸ் படைத்த தலைவர் டத்தோ எம். குமார் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.


