
நீலாய் ஜூலை 28
பாஸ் கட்சியின்றி மலாய்காரர்கள் அல்லாத வாக்காளர்களை கவர்வது எளிதாக இருப்பதாக எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் பெர்சாத்து கட்சியின் நீலாய் தொகுதி வேட்பாளர் டத்தோ வீ. சரவண குமார் கூறினார்.
பாஸ் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மலாய்காரர்கள் அல்லாத வாக்காளர்களை கவருவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாஸ் கட்சியின்றி பெர்சாத்து தனித்துப் போட்டியிடுவதால், நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் பிரச்சாரம் முழுவதும் சீன மற்றும் இந்திய வாக்காளர்களின் ஆதரவு தங்களுக்கு அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாஸ் கட்சியின்றி பெர்சாத்து தனித்துப் போட்டியிடுவதால் 60 விழுக்காடு முதல் 70 விழுக்காடு சீன மற்றும் இந்திய வாக்காளர்கள் பெர்சாத்து மீது தங்களின் ஆர்வத்தை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்த போது, ‘நீங்கள் பாஸ் கட்சியுடன் இருக்கிறீர்களா?’ என பலர் தம்மிடம் கேள்வி எழுப்பி உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பாஸ் கட்சி மீது உள்ள பயம் இந்திய மற்றும் சீன சமூகத்திற்கு இன்னும் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பாஸ் கட்சியின்றி தனித்துப் போட்டியிடுகிறோம் என்ற விளக்கம் தந்த போது, இவ்விரு சமூகமும் தங்களின் உற்சாகத்தை காட்டுவதாக அவர் சொன்னார்.
தங்களின் தேர்தல் பிரச்சாரத்தில் பாஸ் கட்சியின் சின்னம் இல்லாததால், இந்திய மற்றும் சீனு சமூகத்தினர் ஆர்வத்துடன் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர் என்றார் அவர்.


