Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அலை ஓசை தலைமையாசிரியர் நவநீத கிருஷ்ணன் நைரோபி பயணம்!

கோலாலம்பூர் நவ 13
அலை ஓசை ஊடகத்தின் தலைமையாசிரியர் நவநீத கிருஷ்ணன் ரத்தினம் கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா தலைநகரான நைரோபிக்கு பயணமாகிறார்.
நாளை மறுநாள் 15 நவம்பர் வெள்ளிக்கிழமை உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா கோலாலம்பூர்-நைரோபிக்கு இடைநில்லா நேரடி விமான சேவையை தொடங்குகிறது. நைரோபிக்கான இந்த விமான சேவையில் ஊடகவியாளர்களையும் ஏர் ஆசியா அழைத்துச் செல்லும் குழுவில் அலை ஓசை தலைமையாசியரும் இடம்பெறுகிறார். மேலும் இந்த பயண குழுவில் ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.


இந்த பயணத்தின் போது நைரோபியில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து அலை ஓசை ஊடகம் வாசகர்களுக்கு நடப்பு செய்திகளை வழங்கும்.
ஆசியான் நாடுகளில் ஆப்பிரிக்கா கண்டத்திற்கு நேரடி இடைநில்லா விமான சேவையை வழங்கும் முதல் விமான நிறுவனம் ஏர் ஆசியா என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular