
கோலாலம்பூர் நவ 13
முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஜைனுடின் உடல் நலக் குறைவினால் காலமானார்.
துன் டாயிம் இன்று காலை மரணம் அடைந்ததாக அவரின் வழக்கறிஞர் குர்டயால் சிங் நிஜார் உறுதிப்படுத்தினார்.
அன்னாரின் இறுதி சடங்கு இன்று நடைபெறும் என எப்எம்டி ஊடகத்திடம் அவர் குறிப்பிட்டார்.
86 வயதுடைய டாயிம் துன் மகாதீர் முகமது ஆட்சிக்காலத்தின் போது இரண்டு தவணை நிதி அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை மற்றும் 1999 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலும் நிதி அமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.
தற்போது சொத்து அறிவிப்பு காரணமாக டாயிம் மற்றும் அவரது மனைவி நோர்மா நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியுள்ளனர்.


