Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சிலாங்கூர் ஜசெக தலைவராக இங், துணைத் தலைவராககணபதி ராவ் – -கோபிந்த் சிங் தோல்வி

ஷா ஆலம் நவ 10
இன்று நடைபெற்ற முடிந்த சிலாங்கூர் மாநில ஜசெக தலைமைத்துவ தேர்தலில் மாநில ஜசெக தலைவராக கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் சி ஹான் மற்றும் துணைத் தலைவராக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த தேர்தலில் மாநில நடப்பு தலைவரும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் தோல்வி அடைந்தார்.
இந்த தேர்தலில் 15 பேர் கொண்ட தலைமைத்துவ பட்டியலில் முன்னாள் அமைச்சரும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான இயோ பீ இன் 1,180 வாக்குகள் பெற்று முதல் நிலையை அடைந்தார்.


திவ் வே கெங் 1,155 வாக்குகள் பெற்று இரண்டாவது நிலையிலும், கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் சி ஹான் 1,058 வாக்குகள் பெற்று மூன்றாவது நிலையிலும், பந்திங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சி குழு உறுப்பினருமான பாப்பா ராய்டு நான்காவது நிலையிலும், கிள்ளான் பள்ளத்தாக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் ஐந்தாவது நிலையிலும் அடைந்தனர்.


இந்த போட்டியில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷாகரன் 800 வாக்குகள் பெற்று 12 ஆவது நிலையை அடைந்தார்.
இந்த போட்டியில் மாநில தலைமைத்துவ பட்டியலுக்கான 15 பேரில் கோபிந்த் சிங் இடம்பெற தவறிவிட்டார். மாநில ஜசெக முதலாவது உதவி தலைவராக இங் சுவீ லின், இரண்டாவது உதவித் தலைவராக இயான் யோங் இயான், மாநில செயலாளராக இயோ பீ இன், துணை செயலாளராக லியோங் தாக் சீ, பொருளாளராக ஜாமாலியா ஜாலாலுடின், துணை பொருளாளராக ராஜிவ் ரிஷாகரன், அமைப்பு செயலாளராக திவ் வே கெங் மற்றும் துணை அமைப்பு செயலாளராக பாப்பா ராய்டு நியமனம் செய்யப்பட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular