
செப்பாங் நவ 11
இந்தியாவின் ஒன்றிய பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேருக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்வதன் மூலம் உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா வரலாறு படைக்கிறது.
உலகின் முன்னணி சுற்றுலா தளங்களில் ஒன்றான அந்தமான் தீவுக்களுக்கு எதிர்வரும் 16 நவம்பர் 2024 முதல் நேரடி விமான சேவை மேற்கொள்வதில் தாங்கள் பெருமை கொள்வதாக ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் தலைமை விமான மற்றும் வாடிக்கையாளர்கள் அனுபவ அதிகாரி கேசவன் சிவானந்தம் கூறினார்.
ஆசியா மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு இது ஒரு நற்செய்தி என்றார் அவர்.
கோலாலம்பூர்-போர்ட் பிளேர் நேரடி விமான சேவை உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுப் பயணிகளை அதிகம் கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அந்தமானுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு அங்கு பல அதிசயங்கள் காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
உலகின் தலைசிறந்த அழகிய கடற்கரைகளில் ஒன்றான ராதா நகர் கடற்கரை இங்கு தான் உள்ளது.
ஹெவ் லோக் தீவில் உள்ள இந்த ராதா நகர் கடற்கரை அனைத்துலக சுற்று பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது.
நீல நிற கடல் பரிசுத்தமான கரை அனைத்துலக சுற்றுப் பயணிகளை பிரமிக்க வைக்கிறது.
அந்தமான் தீவுகள் கடல் உணவு வகைகளுக்கு மிகவும் புகழ்பெற்ற ஒரு இடம் என்பதில் சந்தேகம் இல்லை.
நாவை ஊற வைக்கும் அனைத்து வகையான கடல் உணவுகள் இங்கு கிடைக்கும் என்பது சந்தேகம் இல்லை.
மீன், இறால், நண்டு கணவாய், மட்டி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த தீவுகள் நீர் வகையான விளையாட்டுகளுக்கு மிகவும் புகழ்பெற்றது .
தற்போதைய நிலையில் அந்தமான் தீவுகளுக்கு பயணிக்க விரும்பும் சுற்றுப்பயணிகள் கோலாலம்பூரிலிருந்து சென்னை, பெங்களூரு அல்லது புது டில்லி சென்றே அந்தமானுக்கு சிறகடிக்க முடியும்.

இந்த பயணமானது அந்தமானை சென்றடைய சுமார் 10 மணி நேரங்கள் பிடிக்கலாம்.
ஆனால் ஏர் ஆசியாவின் இந்த நேரடி விமான சேவையின் மூலம் அந்தமானை 2 மணி நேரத்திற்குள் சென்றடையலாம்.
இந்த புதிய விமான சேவையானது சுற்றுப்பயணிகளுக்கு பயண கட்டணம், அலைச்சல் மற்றும் நேரத்தை மிகவும் குறைக்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.
அடுத்து பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது அரசியல் கைதிகளுக்காக அமைக்கப்பட்ட காலா பாணி சிறைச்சாலை இன்று புகழ் பெற்ற அருங்காட்சியகமாக மிளிர்ந்து வருகிறது.
இந்த சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமல், தொடர்புகள் இல்லாமல் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கைதி என்று நாம் கேள்வி பட்டுள்ளோம். இந்த காலா பாணி சிறைச்சாலையில் தான் அந்த அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டு வந்துள்ளனர்.5 லட்சம் சுற்றுப்பயணிகளை குறி வைக்கிறது அந்தமான் தீவுகள் இதனிடையே இவ்வாண்டில் 5 லட்சம் சுற்றுப்பயணிகளை அந்தமான் தீவுகள் இலக்கை கொண்டுள்ளதாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் சுற்றுலா பிரிவின் தலைவர் முகமட் எச் ஜாட்வெட் கூறினார்.

இந்த இலக்கை அடைய உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியாவின் கோலாலம்பூர்-போர்ட் பிளேர் நேரடி விமான சேவை பெரிதும் துணை புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆசிய மற்றும் ஆசியான் சுற்றுப்பயணிகளுக்கு இந்த நேரடி விமான சேவை சாதகமாக அமையும் என்றார் அவர்.


