
புத்ரா ஜெயா நவ 7
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் வேட்பாளர் டோனால்ட் டிராம்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்தினார்.
மீண்டும் அரசியலுக்கு திரும்பி உள்ள அதிபர் டிராம்பின் இந்த வெற்றி குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரசியல் பிரவேசம் செய்துள்ள அதிபர் டிராம்பை தாம் வாழ்த்துவதாக தமது முகநூலில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
‘நமது இரு நாடுகளின் மக்களின் நன்மைக்காக புதிய அதிபருடன் அழுக்கமாக ஒத்துழைக்க நாங்கள் தயார்’என்றார் அவர்.
தற்போது நடந்து வரும் பாலஸ்தீன் மற்றும் யூ உக்ரேன் போர்களை ஒரு முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிராம் தமது அதிகபட்ச செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
அமெரிக்கா மற்றும் மலேசியாவிற்கு இடையிலான தூதரக மற்றும் வர்த்தக உறவு அதிபர் டிராம்பின் வருகையால் வலுப்பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


