
ஜெமந்தா நவ 24
இங்கு ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றி கரமாக மிளகாய் பயிரில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ஜெகன் குணசேகரனின் முயற்சியை தாம் வெகுவாக பாராட்டுவதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.
இங்கு ஜெமந்தாவில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மிளகாய் பயிரிடும் விவசாயத்தில் இந்த இளைஞர் வெற்றிகரமாக ஈடுபட்டு வருவதாக செகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இன்னும் மூன்று வாரங்களில் இந்த மிளகாய் அறுவடைக்கு தயாராக உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஜெகன் குணசேகரனின் இந்த விவசாயத்திற்கு செகாமட் நாடாளுமன்ற அலுவலகம் நிதி உதவிகளை வழங்கி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவசாயத்திற்கு இதர இயந்திரம் மற்றும் உதவிகளை மித்ரா மற்றும் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு ஆதரவு கடிதங்களை தமது நாடாளுமன்ற அலுவலகம் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
விவசாயத்துறையில் நமது உள்ளூர் இளைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியான விஷயமாகும் என்றார் அவர்.



