Tuesday, November 24, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்;SPM தேர்வை சிறப்பாக எழுதுங்கள்: தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வாழ்த்து.

கோலாலம்பூர், நவ.23-
இந்திய மாணவர்கள் SPM தேர்வை மிகவும் சிறப்பாக எழுத வேண்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

மலேசிய இந்திய மாணவர்கள் கல்விக்கு முன்னுரிமை அளித்து, SPM பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும் என்று எஸ்பிஎம் தேர்வில் அமர்ந்துள்ள இந்திய மாணவர்களுக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தருமான தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு கூறினார்.

கல்வியே ஒருவரின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்கும் அடிப்படைத் தூண் என்பதால் இந்திய மாணவர்கள் கவனம் செலுத்தி படித்து தேர்வில் அமர வேண்டும் என்று. தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் தங்களின் கல்விப் பயணத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தி, சிறந்த அடைவுநிலையை எட்டுவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், ம.இ.கா. மற்றும் MIED இணைந்து கல்வி உதவித்தொகைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், AIMST பல்கலைக்கழகம் இந்திய மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்திய சமூகத்தின் கல்வி முன்னேற்றம் ம.இ.கா.வின் தொடர் கவனத்தில் இருந்து வருவதாகத் தெரிவித்த தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும் எனக் கூறினார்.

SPM தேர்வில் சிறந்த வெற்றியைப் பெற்று, உயர்கல்வி வாய்ப்புகளை நோக்கி மாணவர்கள் தங்களின் பயணத்தைத் தொடர வேண்டும் என்றும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular