Tuesday, November 24, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

செகாமட் நாடாளுமன்ற தொகுதியில் கோலாகல தீபாவளி கொண்டாட்டம்.

செகாமட், நவ 24
செகாமட் நாடாளுமன்ற தொகுதியில் கோலாகல தீபாவளி கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீபாவளி கொண்டாட்டம் கடந்த நவ 21 ஆம் தேதி இங்குள்ள பத்து அன்னாம் பல்நோக்கு மண்டபத்தில் தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சரும் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கொண்டாட்டத்தின் வெற்றிக்கு சிகாமட் நாடாளுமன்ற அலுவலகத்தின் பணியாளர்கள் மற்றும் பத்து அன்னாம் மடானி சமூகத்தினரும் முக்கிய பங்காற்றியதாக யுனேஸ்வரன் கூறினார்.

செகாமட் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த பல்லின மக்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து மகிழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
இங்குள்ள மாவட்ட அலுவலக பணியாளர்கள், அரசாங்க இலாகாக்களின் ஊழியர்கள், அரசு சார்பற்ற சங்கங்களின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது தமக்கு மகிழ்ச்சியை தருவதாக அவர் சொன்னார்.
காஷ்மீர் ஸ்டோன்,ஹெவோக் பிரதர்ஸ்,தஞ்சை கமலா இந்திரா நாட்டிய பள்ளி,ஆர்ஜே அஸ்வினி மற்றும் மன்மதா பென்ட் ஆகிய தரப்பினருக்கு இவ்வேளையில் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular