Tuesday, November 24, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பண்டாமாரானில் உள்ள சீன ஆலயத்திற்கு நில பட்டா வழங்கப்பட்டது!

கிள்ளான் நவ 24
நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வந்த இங்குள்ள நாம் இயோங் சுன் தியான் கோங் ஆலயத்திற்கு நிலப்பட்டா பெற்று தந்ததில் தாம் மனநிறைவு அடைவதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் கூறினார்.
பல ஆண்டுகளாக சட்ட சவால்கள் மற்றும் பல அரசாங்க அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட பணிகளையும் கடந்து இறுதியாக இந்த ஆலயத்தின் பெயரில் நிலப்பட்டா பெறப்பட்டதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.
இந்த பணிகளுக்கு முக்கிய பங்காற்றிய வழக்கறிஞர் கோகிலாவிற்கு இவ்வேளையில் தாம் நன்றி கூறுவதாக அவர் சொன்னார்.
இந்த ஆலயத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு இந்த பட்டா மிகவும் உதவும் என்றார் அவர்.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கு தாம் நன்றி கூறிக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular