
செப்பாங், அக் 5
இந்தியாவின் அகமதாபாத் மற்றும் அமிர்தசரஸ் நகரங்களுக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதை முன்னிட்டு ஏர் ஆசியா சிறப்பு கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது.
கோலாலம்பூரிலிருந்து இருந்து அகமதாபாத் மற்றும் அமிர்தசரஸ் செல்லும் ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணங்கள் RM669 முதல் தொடங்குகின்றன.
முன்பதிவு காலம்: 5 – 11 அக்டோபர் 2026
பயண காலம்:
- அகமதாபாத்: 25 அக்டோபர் 2026 – 31 ஆகஸ்ட் 2027
- அமிர்தசரஸ்: 2 டிசம்பர் 2026 – 31 ஆகஸ்ட் 2027
இரு நகரங்களுக்கும் வாரத்திற்கு 4 விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், பயணிகள் தங்களின் பயணத் திட்டத்தை மாற்றும்போது ஒருமுறை மாற்றக் கட்டண விலக்கு மற்றும் விமான முன்பதிவின் போது 20 கிலோ செக்-இன் பயணப்பையை RM30க்கு சேர்க்கும் சலுகையையும் பெறலாம்.


