Thursday, November 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சரவாக் மற்றும் இந்தியப் பழங்குடியினப் பெண்களுக்கு ஒரே மாதிரியான சவால்கள் – இந்திய உயர் ஆணையர்!

இந்தியா மற்றும் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள், குறிப்பாக வனவளங்களைச் சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளில் பல்வேறு ஒற்றுமைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வருவதாக மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் சோம்நாத் கோஷ் தெரிவித்தார்.

இரு பகுதிகளிலும் உள்ள பழங்குடியினப் பெண்கள் தேன், மூங்கில், மூலிகைகள் உள்ளிட்ட வனப் பொருட்களைச் சேகரிப்பதன் மூலம் தங்களது குடும்பப் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் 12.5 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடியினப் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 4,000-க்கும் மேற்பட்ட வன சுகாதார மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முடிவுகளை எடுக்கும் செயல்முறைகளில் பெண்களுக்கும் உரிய குரலும் பங்களிப்பும் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கூச்சிங்கில் நடைபெற்ற முதலாவது தெற்காசிய அனைத்துலக மகளிர் பேரவை (SAIWA) 2026 நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியை சரவாக் மாநிலத்தின் மகளிர், ஆரம்பகால குழந்தைப் பருவம் மற்றும் சமூக நல மேம்பாட்டுத் துறை பொறுப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாத்திமா அப்துல்லா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

இதன்போது, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்க்கைப் பயணத்தையும் உதாரணமாகக் குறிப்பிட்ட சோம்நாத் கோஷ், கிராமப்புறப் பெண்கள் சமூகத்தின் அடித்தளத்திலிருந்து உயர்ந்த தலைமைப் பொறுப்புகளை அடைய முடியும் என்பதற்கு அது சிறந்த ஊக்கமாக அமைகிறது என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular