Saturday, November 14, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உள்நாட்டு பயணத் தேவையை நிறைவு செய்ய உடனடியாக விமானங்களை தருவிக்க பாத்தேக் ஏர் தயார் நிலை -டத்தோ சந்திரன் ராமமூர்த்தி!

சுபாங் செப் 17
உள்நாட்டு விமான பயண சேவையை நிறைவு செய்ய உடனடியாக விமானங்களை தருவிக்க தமது நிறுவனம் தயார் என பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராமமூர்த்தி கூறினார்.
உள்நாட்டு விமான சேவையின் தேவைக்கு ஏற்பட்டால் உடனடியாக விமானங்களை தெரிவிக்க தமது நிறுவனம் தயார் என அவர் குறிப்பிட்டார்.
நிதி சுமையில் எதிர் நோக்கியுள்ள ஏர் ஆசியாவின் உள்நாட்டு விமான பயண வழித்தடங்களை நிறைவு செய்ய மலேசிய ஏர்லைன்ஸ் மற்றும் பாத்தேக் ஏர் மலேசிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்ட அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.


மலேசியாவின் முன்னணி விமான நிறுவனங்களின் ஒன்றான பாத்தேக் ஏர் தற்போது 51 விமானங்களை கொண்டு 60 நகரங்களுக்கு சிறகடித்து வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 45 லட்சம் பயணிகளை பாத்தேக் ஏர் கொண்டு சென்றுள்ளது.
அதே வேளையில் 2024 ஆம் ஆண்டில் 66 லட்சம் பயணிகளை இந்த விமான நிறுவனம் கொண்டு சென்றுள்ளது.
உள்நாடு மற்றும் ஆசியாவில் இன்னும் கூடுதல் நகரங்களுக்கு தனது சேவையை விரிவுபடுத்த பாத்தேக் ஏர் திட்டம் கொண்டுள்ளதாக டத்தோ சந்திரன் ராமமூர்த்தி குறிப்பிட்டார்.
பயணிகளின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதே தமது நிறுவனத்தின் பிரதான நோக்கம் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular