Sunday, September 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலேசிய தின கொண்டாட்டத்தில் யுனேஸ்வரன் கலந்து கொண்டார்.

கூச்சிங் செப் 17
நேற்று கூச்சிங் நகரில் நடைபெற்ற தேசிய நிலையிலான மலேசிய தின கொண்டாட்டத்தில் தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கலந்து கொண்டார்.
தேசிய நிலையிலான இந்த கொண்டாட்டம் இங்குள்ள போர்னியோ மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்தக் கொண்டாட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி, சரவாக் முதலமைச்சர் டத்தோஸ்ரீ அபாங் ஜொகாரி,சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி மற்றும் சரவாக் மற்றும் சபா மாநில அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.
இதனிடையே இந்த கொண்டாட்டம் ஒரு தினத்தை நினைவு கூறும் நாள் மட்டுமின்றி, நம்பிக்கையின் அடிப்படையில் செய்து கொள்ளப்பட்ட 1963 மலேசிய ஒப்பந்தம் என யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.
அனைத்து இன மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் ஒரு பிரதான ஒப்பந்தம் இது என அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular