
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு விவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் துணை அமைச்சர் ஜித்தின் பிரசாட சந்திப்பு நடத்தினர்.
4 ஆவது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசை மாநாடு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையற்றார்.
இந்த மாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டன.

பிராந்திய விவகாரங்கள் மற்றும் உலகளாவிய மேம்பாடுகள் குறித்தும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கலந்துரையாடல் நடத்தினர்.
சிங்கப்பூர் மற்றும் இந்தியா நீண்ட கால தூதரக உறவுகளை கொண்டுள்ளன.
இதனிடையே சிங்கப்பூரில் இந்திய தூதரக புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் கலந்து கொண்டனர்.


