
கோலாலம்பூர் ஆக 24
அண்மையில் டானாவ் கோத்தா தேசிய இடைநிலைப் பள்ளி கோலாலம்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவி படிவம் நாளில் படித்த கெசியா நிஷா அவர்களின் மரணச் செய்தி நம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
விவகாரம் தொடர்பாக இனவாத துன்புறுத்தல், அவமதிப்பு, பகடிவதை வழக்கில் கெசியா மாதிரி ஒரு மாணவி போகும்போது ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருக்கின்றதா? என்று கேள்வி வரத்தான் செய்யும் ஆசிரியர் பங்கு அதிகம் கடவுளுக்கு அடுத்த நிலை அதனால் மாணவர்களை பாதுகாத்தலும் பொறுப்பும் அதிகம்.ஆசிரியர் முக்கிய பங்கு வகுப்பில் ஒரு பிள்ளை திடீரென அமைதியாக இருந்தாலோ, தேர்வு மதிப்பு குறைந்தாலோ, தனியாக உட்கார்ந்து இருந்தாலோ அல்லது அழுது கொண்டு இருந்தாலோ இதை முதலில் பார்க்க வேண்டியது ஆசிரியர் தான். இனம் மதம் பாராமல் என்னம்மா ஆச்சு? என்று ஒரு வார்த்தை கேட்கணும். அதுதான் ஆசிரியர்களுக்கான கடமை மற்றும் பொறுப்பு ஆகும்.

கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் (Fadhlina Sidek) பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தேர்வுப்பயம் மற்றும் மதிப்பெண் தொடர்பான அழுத்தங்களை குறைக்கும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் முறையான ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் தகுதியான ஆலோசகர்கள் (Counsellors) நியமிக்கப்பட வேண்டும்.
சுகாதார அமைச்சு மனநலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளுக்குச் சென்று மனநல முகங்கள் நடத்தி மாணவர்களுக்கு இலவசமான விழிப்புணர்வினை வழங்க வேண்டும்.
குடும்பங்களில் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் திட்டங்களை கொண்டு வர வேண்டும். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு எதிரான மிரட்டல், பகடிவதை, கொடுமைப்படுத்துதல் போன்றவற்றை கல்வி அமைச்சு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
புகார்கள் கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் அச்சமின்றி தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கும் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கல்வி அமைச்சு உறுதி செய்யப்பட வேண்டும்.
NUTP ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் நடத்தை மாற்றத்தை கண்காணிக்க வேண்டும். ஒரு ஆசிரியராக ஒரு வழிகாட்டியாக, நண்பராக இருக்க வேண்டும். மதிப்பெண் தான் எல்லாம் என்ற எண்ணத்தை மாற்றி வாழ்க்கை முக்கியம் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் மாதம் ஒரு முறை மாணவர்களுடன் கலந்துரையாடல் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை அடிக்கடி நடத்துதல்.
ஒரு மாணவரின் உயிர், மதிப்பெண்ணையும் போட்டியையும் விட மேலானது.
சில ஆசிரியர்கள் ஏனோ தானோ என்று பொறுப்பற்ற நிலையில் இருக்கக்கூடாது.
மாணவர் நலனும் பாதுகாப்பும் எப்போதும் முதன்மை.

கல்வி அமைச்சு, சுகாதாரத்துறை, பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு, காவல்துறை, ஆசிரியர் சங்கம் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து இந்த பள்ளி நிர்வாக சங்கிலித்தொடர் தற்கொலையை தடுக்க உறுதி செய்ய வேண்டும்.
“நீ தனியாக இல்லை நாங்கள் இருக்கின்றோம்.” என்ற ஒவ்வொரு மாணவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம். மாணவ மாணவிகள் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க மலேசியராகிய நாம் வழிவகுப்போம். என மலேசிய மறுவாழ்வுச் சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு கோரிக்கை விடுத்தார்.


