Monday, October 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பொதுச் சேவையில் பெண்களின் பங்கேற்பு 60.41 விழுக்காடாக அதிகரிப்பு.

புத்ராஜெயா, அக் 5

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நிலவரப்படி, பொதுச் சேவைத் துறையில் பெண்களின் பங்கேற்பு 60.41 விழுக்காட்டை எட்டியுள்ளதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

அதே காலகட்டத்தில், பொதுச் சேவையின் உயர் நிர்வாகக் குழுவில் பெண்களின் பங்கேற்பு 39.96 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும், இது 2024ஆம் ஆண்டில் பதிவான 39.32 விழுக்காட்டை விட அதிகமாகும் என அவர் தெரிவித்தார்.

“இந்த எண்ணிக்கையில் சீருடைப் பணியாளர்கள் இடம்பெறவில்லை. அதேவேளையில், தொடர்பு அமைச்சில் பெண்களின் பங்கேற்பும் மிகவும் சிறப்பாக உள்ளது.” என்றார்.

“இதன் வழி, இன்ஸ்பையர்ஹர் (INSPIREHER) கருத்தரங்கு மூலம் மேலும் அதிகமான பெண் அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து முன்னேறுவதற்கான ஊக்கத்தை வழங்க முடியும் என நம்புகிறோன்,” என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் நிறுவனமான (இப்தார்) ஏற்பாட்டிலான இன்ஸ்பையர்ஹர் கருத்தரங்கிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். இதில் 50 பெண் அரசுப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்பு அமைச்சில் மொத்த பணியாளர்களில் பெண்கள் 44 விழுக்காடாக உள்ளதாகவும், அதில் சமூகத் தொடர்புத் துறையில் (57 விழுக்கடு), இப்தார் (56 விழுக்கடு), மலேசிய தேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா) 54 விழுக்கடு என பெண்களின் பங்கேற்பு அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் தியோ தெரிவித்தார்.

இதனிடையே, தேசிய தகவல் தொடர்பு மையமான (நாடி), AI@NADI திட்டத்தின் வழி கடந்த ஜூன் மாதம் நாடு முழுவதும் உள்ள 1,099 நாடி மையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் 25,000 பங்கேற்புகளை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 20,044 பங்கேற்புகள் பதிவாகியுள்ளதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.

“தற்போது, 1,247 பேர் இந்தத் திட்டத்தின் AI கட்டளைப் பொறியாளரை தேர்ந்தெடுக்கும் பல்வேறு நிலைகளில் பங்கேற்று வருகின்றனர். அவர்களில் 856 பேர் அல்லது 69 விழுக்காட்டினர் பெண்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாடியிலும் குறைந்தது ஒரு செயற்கை நுண்ணறிவு கட்டளைப் பொறியாளரை உருவாக்குவதன் மூலம், சமூக அளவில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேலும் வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular