Wednesday, August 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜப்பானின் முதல் ஐகானிக் பீர் சப்போரோ 150 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது.

ஷா ஆலம், ஆக 12
1876ஆம் ஆண்டு முதல் ஜப்பானிய கைவினைத்திறன், துல்லியம் மற்றும் தரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் சப்போரோ (Sapporo) தனது 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இதையொட்டி, மலேசியாவில் Carlsberg Malaysia நிறுவனம் மங்கா கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு பதிப்பு கேன்கள் மற்றும் பல்வேறு அனுபவ நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, பிரபல ஜப்பானிய மங்கா கலைஞர் ஹிரோகி இஷிசாவா (Hiroki Ishizawa) உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பதிப்பு கேன் அறிமுகமாகியுள்ளது. இதில் சப்போரோவின் நிறுவனர் செய்பெய் நககாவா (Seibei Nakagawa) இடம்பெற்றுள்ளார்.

ஜப்பானிய கைவினைத்திறனின் ஒழுக்கம், தரத்திற்கான அர்ப்பணிப்பு, சவால்களை எதிர்கொள்ளும் துணிவு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மங்கா வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சப்போரோவின் 150 ஆண்டுகால வரலாற்றை சேகரிக்கக்கூடிய கலைப்படைப்பாகவும் இந்த சிறப்பு கேன்கள் மாற்றுகின்றன.

சப்போரோவின் 150 ஆண்டுகால பயணத்தை மங்கா வடிவில் அறிந்துகொள்ளும் வகையில் சிறப்பு டிஜிட்டல் அனுபவமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசிய நுகர்வோர் சப்போரோவின் இணையதளம் மூலம் தங்களது புகைப்படத்தைப் பதிவேற்றி, ஜப்பானிய மங்கா கலைப்பாணியில் தங்களை ஒரு மங்கா கதாபாத்திரமாக மாற்றிக்கொள்ளலாம். முதல் 1,500 பேருக்கு தனிப்பயனாக்கப்பட்ட மங்கா லேன்யார்டு இலவசமாக வழங்கப்படும். லேன்யார்டுகளுக்கான முழு எண்ணிக்கையும் முடிந்த பின்னர், அடுத்த சப்போரோ பிரீமியம் பீர் கொள்முதலுக்கு பயன்படுத்தக்கூடிய RM10 Shopee மின் வவுச்சர் வழங்கப்படும்.

Carlsberg Malaysia நிர்வாக இயக்குநர் Stefano Clini கூறுகையில், மலேசிய நுகர்வோர் தரத்துடன் மட்டுமல்லாமல், வலுவான அடையாளம், உண்மையான வரலாறு மற்றும் அர்த்தமுள்ள அனுபவங்களைக் கொண்ட பிரீமியம் பிராண்டுகளை அதிகம் விரும்புகின்றனர் என்றார்.

இந்த 150ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 24 முதல் 26 ஜூலை 2026 வரை Desa ParkCity-யின் Plaza Arkadia மற்றும் 31 ஜூலை முதல் 2 ஆகஸ்ட் 2026 வரை Pavilion Bukit Jalil ஆகிய இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து ING Live Kuala Lumpur நிகழ்ச்சியிலும் சப்போரோவின் 150 ஆண்டுகால வரலாற்றை மையமாகக் கொண்ட மங்கா வடிவிலான கண்காட்சிகள், AR புகைப்பட அரங்குகள் மற்றும் ஜப்பானிய பீர் தயாரிப்பு கைவினைத்திறனை அடிப்படையாகக் கொண்ட ஊடாடும் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இதில் பங்கேற்பவர்கள் தங்களது வேகம் மற்றும் துல்லியத்தைச் சோதிக்கும் Samurai Slash Challenge போட்டியிலும், சரியான முறையில் பீர் ஊற்றும் ‘Perfect Pour’ அனுபவத்திலும் பங்கேற்கலாம்.

மேலும், ING Live Kuala Lumpur நிகழ்ச்சியில் அதிகளவில் சப்போரோ பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு இருவருக்கான RM30,000 மதிப்பிலான சப்போரோ, ஜப்பான் பயணம் வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. சப்போரோ பிராண்ட் முதன்முதலில் உருவான நகரத்தை நேரில் அனுபவிக்கும் வாய்ப்பாக இது அமையும்.

மேற்கு மலேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சூப்பர் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகளிலும் Samurai Slash Challenge மற்றும் சப்போரோ பொருட்களை வாங்குவதன் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட மங்கா லேன்யார்டுகளைப் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இவை இருப்பு உள்ளவரை மட்டுமே கிடைக்கும்.

மேலும், 150ஆவது ஆண்டு சிறப்பு விளம்பரப் பொதியில் எட்டு சிறப்பு பதிப்பு கேன்களுடன், ஹொக்கைடோவில் உள்ள சப்போரோ பிரீமியம் பீரின் பிறப்பிடமான Mount Yotei-யை அடிப்படையாகக் கொண்ட பிரத்யேக சப்போரோ 150ஆவது ஆண்டு கண்ணாடியும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பொருட்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

சேகரிக்கக்கூடிய கேன் வடிவமைப்புகள், மங்கா அனுபவங்கள் மற்றும் சப்போரோ பீருடன் பகிரப்படும் தருணங்கள் என, ஜப்பானிய கைவினைத்திறனின் 150 ஆண்டுகால பாரம்பரியத்தை நவீன முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தக் கொண்டாட்டங்கள் அமைந்துள்ளன.

மேலும் தகவல்களுக்கும் சமீபத்திய அறிவிப்புகளுக்கும் SapporoMY-யை Facebook மற்றும் Instagram-ல் பின்தொடரலாம்.

குறிப்பு: அனைத்து விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளும் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமே. மது அருந்தினால் வாகனம் ஓட்ட வேண்டாம். பொறுப்புடன் கொண்டாடுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular