
விடுமுறை காலம் தொடங்கி விட்டதால் தாய் ஏர் ஆசியா மற்றும் தாய் ஏர் ஆசியா எக்ஸ் கூடுதல் வழித்தடங்களுக்கு சிறகடிக்க வியூகும் கொண்டுள்ளது.
இந்த விடுமுறை காலத்தில் ஆசியாவில் 46 நகரங்களில் 53 வழித்தடங்களில் சிறகடிக்க திட்டம் கொண்டுள்ளது.
ஏர் ஆசியா தாய் மற்றும் ஏர் ஆசியா தாய் எக்ஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அனைத்துலக விமான வழித்தடங்களை மீண்டும் தொடங்குகிறது.
மத்திய கிழக்கு போரின் காரணமாக தற்காலிகமாக ஜ தடை செய்யப்பட்ட வழித்தடங்களை மீண்டும் தொடங்க தாங்கள் திட்டம் கொண்டிருப்பதாக தாய் ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் தான்சித்தா அக்ராரித்ப்பிரரோம் கூறினார்.
இருப்பினும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை விடுமுறை காலம் என்பதால் பயணிகளின் தேவையை நிறைவு செய்ய தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த காலகட்டத்தில் அனைத்துலக வழித்தடங்களை அதிகரிக்க தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் ஏற்றத்தின் காரணமாக சில முக்கிய வழித்தடங்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் தற்போது மீண்டும் அந்த வழித்தடங்கள் சேவையை தொடங்க தாங்கள் தயார் என்றார் அவர்.


