Wednesday, September 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சியாம் சங்கத்தின் வெள்ளி விழா இரவு விருந்தில் யுனேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்!

மலேசிய சியாம் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு வெள்ளி விழா இரவு விருந்து நிகழ்ச்சியில் ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கலந்து சிறப்பித்தார்.
இந்நாட்டில் உள்ள சியாம் சமூகத்துடன் அணுக்கமாக பழக தமக்குக் கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு இது என யுனேஸ்வரன் தெரிவித்தார்.
இந்நாட்டிலுள்ள சியாம் சமூகத்தை ஒன்றிணைக்க மலேசிய சியாம் சங்கம் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு தமக்கு முதல் முறையாக என்ற போதிலும், சியாம் சமூகத்தினர் மிகவும் அன்பாக பழகி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
50 ஆண்டு என்பது ஒரு எண்ணிக்கை மட்டும் அல்லாமல், இந்த சங்கம் சியாம் சமூகத்தினரிடையே ஒற்றுமை நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்து மலேசிய சமூகம் மற்றும் சியாம் சமூகத்தினரை இணைக்கும் ஒரு பாலமாக இந்த சங்கம் இருந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular