Thursday, September 24, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாண்டார் ஊத்தாமா பள்ளி துயரச் சம்பவம்:மற்றொரு துயரச் சம்பவத்திற்கு காத்திருக்காமல் நடவடிக்கை தேவை!

பாண்டார் ஊத்தாமா பள்ளியில் நடந்துள்ள துயரச் சம்பவம் போல் மற்றொரு துயரச் சம்பவம் நிகழாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் வலியுறுத்தினார்.
அந்த துயர சம்பவத்தில் 16 வயதுடைய மாணவியின் மரணம் மனதை உடைக்கக்கூடிய சம்பவம் என அவர் குறிப்பிட்டார்..
இப்படியொரு வலி எந்த ஒரு குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது என
அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகள் மற்றும் பருவ வயதினர் எதிர்நோக்கும் மனநல பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதற்கான உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தில் உயிர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இது நமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
அந்த துயரச் சம்பவம் நடப்பதற்கு முன்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்த மாணவியின் நடத்தை மட்டும் உளவியல் நடவடிக்கைகள் மாற்றம் இருந்து வந்ததாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடவியல் மனநல மருத்துவ பரிசோதனையின் முடிவு காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாணவி பள்ளியில் நடந்த ஆலோசனை அமர்வின் போது தமது தாய் மற்றும் இரண்டு சக வகுப்பு மாணவர்களுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக மருத்துவ பரிசோதனையின் முடிவு காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களிடையே தென்படும் இது போன்ற மாற்றங்களை ஆசிரியர்கள் உடனடியாக அடையாளம் கண்டு அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற கடுமையான நடத்தைகளை கட்டொழுங்கு பிரச்சனையாக ஆசிரியர்கள் கருதி விடக்கூடாது.
குறிப்பாக பள்ளி வட்டாரத்தில் மாணவர்களின் மனநல ஆதரவு முறையை கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு மறுபரிசலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு மனநல பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் மருத்துவர்கள் அல்ல. ஆனால் மாணவர்களுக்கிடையே ஏற்படும் மாற்றங்களை கண்டறியும் முதன்மை நபர்கள் ஆசிரியர்கள் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular