
கோலாலம்பூர் ஆக 12
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக HRWF மனித உரிமை அமைப்பின் கருத்தரங்கில், மலேசியாவின் பிரதிநிதியாக அனைத்துலக ஊடகமான அலை ஓசை மீடியாவின் தலைமை ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் ரத்தினம் கலந்து கொண்டார்.
“சமய மற்றும் பேச்சுரிமை சுதந்திரம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மனித உரிமைத் தலைவர்கள் உரையாற்றினர்.
இதன்போது, உலக அமைதிக்காகப் போராடி வரும் தென் கொரியாவைச் சேர்ந்த 95 வயதுடைய தலைவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மனித உரிமை மீறலாகும் என நவநீத கிருஷ்ணன் ரத்தினம் வலியுறுத்தினார்.

மேலும், HWPL இயக்கத்தின் தலைவர் லீ மான் ஹீயின் உடல்நலம் தொடர்பாகவும் மனித உரிமைத் தலைவர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு கருத்தரங்கில் கலந்து கொண்ட Mr. Hanns, லீ மான் ஹீ நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் எவ்விதக் குறைபாடும் இல்லை என்றும் பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அன்பு மற்றும் அமைதியை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த அனைத்துலக மனித உரிமை கருத்தரங்கில் மலேசியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்ட நவநீத கிருஷ்ணன் ரத்தினத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது சர்வதேசப் பயணமும் மனித உரிமை தொடர்பான சேவைகளும் நமது நாட்டின் மக்களின் எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என அவர் குறிப்பிட்டதுடன், நவநீத கிருஷ்ணன் ரத்தினத்தின் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.



