Friday, July 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

லோபாக் தொகுதியில் பாஸ் ஆதரவு பேரவையின் பிஎம் குமார் போட்டியிடுகிறார்!

எதிர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் லோபாக் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளராக பாஸ் ஆதரவு பேரவையின் பிஎம் குமார் போட்டியிடுகிறார்.
நெகிரி செம்பிலான் மாநில பாஸ் ஆதரவு பேரவையின் தலைவரான இவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நன்கு அறிமுகமான ஒருவர் என கருதப்படுகிறது.
நேற்று தலைநகரில் நடந்த பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உச்சம மன்ற கூட்டத்தில் கூட்டணியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பாஸ்,வாவாசான்,
எம்ஐபிபி மற்றும் கெராக்கான் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடுகள் குறித்தும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் பாஸ் ஆதரவு பேரவையின் ஒரே வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உச்ச மன்ற கூட்டத்திற்கு கூட்டணியில் தலைவர் டத்தோஸ்ரீ சாம்சுரி மொக்தார் தலைமையேற்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular