
சிரம்பான் ஜூலை 17
அண்மையில் ஜொகூர் மாநில தேர்தலில் மஇகா அடைந்த 100 விழுக்காடு வெற்றி, எதிர் வரும் ஆக 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் உறுதி செய்வோம் என மஇகா உதவி தலைவர் டத்தோ அசோஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் மஇகா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றார் அவர்.
சிரம்பான் ஜெயாவில் தினாளன் ராஜகோபால் மற்றும் ஸ்ரீ தஞ்சோங்கில் அச்சுதன் போட்டியிட இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அண்மையில் நடந்து முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஇகா 4 தொகுதிகளில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றது என்றார் அவர்.
அதே போல் ஜொகூரில் வீசிய நீள அலை நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் வீசி தேசிய முன்னணியை வெற்றி பெற செய்யும் என அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் மஇகா போட்டியிடும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதி நான்கு தவணைகளாக பாக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ளன.
இந்த தேர்தலில் இந்த தொகுதியை மஇகா நிச்சயம் கைப்பற்றும் என சிரம்பான் ஜெயா தேர்தல் இயக்குனருமான அவர் சொன்னார்.
இந்த தொகுதியில் 45% சீன,28% இந்திய மற்றும் 25% மலாய் வாக்காளர்கள் உள்ளனர்.
அதே போல் மஇகா போட்டியிடும் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் 27% இந்திய, 38% மலாய் மற்றும் 31% சீன வாக்காளர்கள் உள்ளனர்.
தேசிய முன்னணி மீண்டும் வலிமை பெற்று வருவதால் இவ்விரு தொகுதிகளையும் மஇகா நிச்சயம் கைப்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய சமூகத்தின் ஆதரவு மஇகாவிற்கு கிடைக்கும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.


