Friday, July 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நெகிரி செம்பிலான் தேர்தலில் பங்காளி கட்சிகளுக்கிடையிலான தொகுதிகள் ஒதுக்கீட்டை பெரிக்காத்தான் முடிவு செய்தது

எதிர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தனது பங்காளி கட்சிகளுக்கிடையிலான தொகுதிகள் ஒதுக்கீட்டை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி முடிவு செய்துவிட்டது.
நேற்று தலைநகரில் நடைபெற்ற கூட்டணியின் உச்ச மன்ற கூட்டத்தில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ சாம்சுரி மொக்தார் கூறினார்.
பாஸ்,வாவாசான்,
எம்ஐபிபி மற்றும் கெராக்கானன் ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டதாக பாஸ் கட்சியின் உதவித் தலைவரும் திரங்கானு மந்திரி பெசாருமான அவர் சுட்டிக் காட்டினார்.
நெகிரி செம்பிலான் மாநில மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சுமுகமான அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தயார் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular